Enable Javscript for better performance
எட்டிமடை தேவி கருமாரியம்மன் கோயில் திருவிழா- Dinamani

சுடச்சுட

    

    எட்டிமடைப்புதூரில் அமைந்துள்ள தேவி கருமாரியம்மன் கோயில் திருவிழா வெள்ளிக்கிழமை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
    கடந்த 20-ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கி விழாவில் நாள்தோறும் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள், சக்தி அழைத்தல். கும்பம் தாளித்தல், அம்மனுக்கு பூச்சொரிதல் நிகழ்வுகள் நடத்தப்பட்டன. திருவிழாவின்  8-ஆம் நாளில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர். 
    உலக நன்மை வேண்டியும், மழை வளம் வேண்டியும் கூட்டுப் பிராத்தனை நடைபெற்றது. இதில் பங்கேற்ற அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதையடுத்து, திருவிழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் வைத்தல், அக்னி கரகம் எடுத்தல், அலகு குத்துதல், தீர்த்தக்குடம் எடுத்தல் நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழாவுக்கான ஏற்பாடுகளை ஊர் கோயில் கமிட்டியினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai