Enable Javscript for better performance
குடிநீர் தரத்தை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்: ஆட்சியர்- Dinamani

சுடச்சுட

    

    குடிநீர் தரத்தை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்: ஆட்சியர்

    By DIN  |   Published on : 31st March 2018 08:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாட்டிலில் விற்கப்படும் குடிநீரின் தரத்தை இணையதளம் மூலம் தெரிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளதாக நாமக்கல் ஆட்சியர் மு.ஆசியாமரியம் தெரிவித்தார்.
    இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    நாமக்கல் மாவட்டத்தில் இயங்கி வரும் பாட்டில் குடிநீர்த் தயாரிப்பு நிறுவனங்களின் குடிநீரின் தரத்தை உணவு பாதுகாப்புத் துறையின் இணையதளம் மூலம் பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம். குடிநீர் உற்பத்தியாளர்களின் ஐஎஸ்ஐ எண் அல்லது உணவு பாதுகாப்பு உரிமம் எண்ணை பயன்படுத்தி பரிசோதனை அறிக்கை மற்றும் பயன்படுத்தும் கால அளவை தெரிந்து கொள்ளலாம்.
    பொதுமக்கள் வாங்கும்  தண்ணீர் பாட்டில், தண்ணீர் பாக்கெட் மற்றும் 20 லிட்டர் கேன்களில் ஐ.எஸ்.ஐ. எண் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை  உரிமம் எண் இரண்டையும் பதிவிட்டிருக்க வேண்டும்.  இந்த இரண்டு எண்களில் எதாவது ஒரு எண்ணை மட்டும் வைத்து இணையதளத்தில் குடிநீர் நிறுவனத்தின் பெயரை பதிவேற்றம் செய்தால், அந்த நிறுவனத்தின் ஐஎஸ்ஐ தரம் மற்றும் உணவு பாதுகாப்புத் துறையால் வழங்கப்படும் தரம், தற்போது செயல்பாட்டில் உள்ளதா என்பதையும், தண்ணீர் ஆய்வக அறிக்கை ஆகியவற்றை தெரிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. புகார்களை 94440 42322 என்ற செல்லிடப்பேசி எண்ணில் கட்செவி அஞ்சல் மூலம் அனுப்பலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai