Enable Javscript for better performance
தறிப்பட்டறை உரிமையாளர் கொலை: 2 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    திருச்செங்கோடு அருகே தறிப்பட்டறை உரிமையாளரைக் கொலை செய்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    தேவனாங்குறிச்சி செம்மக்கல்மேடு பகுதியில் தறிப்பட்டறை வைத்துள்ளவர் குப்புசாமி(50). இவர் புதன்கிழமை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். விசாரணையில் வட்டிக்கு பணம் தரும் குப்புசாமியை தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிய வந்தது.
    இந்த நிலையில், இதுதொடர்பாக சூரியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தனபாலிடம் (38)  போலீஸார் நடத்திய விசாரணையில்  தனபால், அவரது நண்பர் ஈரோட்டைச் சேர்ந்த கமல்ராஜ்(38) ஆகிய இருவரும் குப்புசாமியைக் கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரிய வந்தது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai