Enable Javscript for better performance
புனித வெள்ளி: நாமக்கல் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் சிலுவைப்பாதை வழிபாடு- Dinamani

சுடச்சுட

    

    புனித வெள்ளி: நாமக்கல் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் சிலுவைப்பாதை வழிபாடு

    By DIN  |   Published on : 31st March 2018 08:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புனித வெள்ளியையொட்டி, நாமக்கல் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் சிலுவைப்பாதை வழிபாடு நடைபெற்றது.
    பங்குத்தந்தை பிரான்சிஸ் தலைமையில் காலை 7 மணிக்கு சிலுவைப்பாதை வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து  2 மணி வரை ஆராதனை நடைபெற்றது. மாலை 6.15 மணிக்கு திருச்சிலுவை ஆராதனை சடங்குகள் நடைபெற்றது. 
    சனிக்கிழமை மாலை 6 மணிக்கு ஒப்புரவு அருள்சாதனம் நடைபெறுகிறது. இரவு 11.30 மணிக்கு பஸ்கா திருவிழிப்புணர்வு சடங்குகள், ஒளி வழிபாடு பங்குத்தந்தை பிரான்சிஸ், ஆரோக்கிய டேவிட்  தலைமையில் நடைபெறுகிறது.
    இதைத் தொடர்ந்து நற்கருணை வழிபாடு நடைபெறுகிறது. ஏப்ரல் 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இயேசுவின் உயிர்ப்பு பெருவிழாவை முன்னிட்டு காலை 9 மணிக்கு ஆடம்பர ஈஸ்டர் பெருவிழா திருப்பலி நடைபெறுகிறது. 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai