Enable Javscript for better performance
பேராசிரியர் வீட்டில் நகை திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    நாமக்கல் அருகே தனியார் கல்லூரி உதவிப் பேராசிரியர் வீட்டில் நகை திருடிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். 
    நாமக்கல் அருகே என்.கொவம்பட்டி, அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் தினேஷ்( 29). இவர் நாமக்கல் தனியார் பொறியியல் கல்லூரியில், உதவிப் பேராசிரியாகப் பணியாற்றி வருகிறார். அவரது தந்தை சுப்பிரமணியன், அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணியாற்றுகிறார். வியாழக்கிழமை மாலை எருமப்பட்டி அருகே உள்ள மகாதேவியில் உள்ள குலதெய்வம் கோயிலுக்கு தினேஷ், அவரது தாய் ரத்தினம், மனைவி தேன்மொழி ஆகிய மூன்று பேரும் சென்று விட்டனர்.  சுப்பிரமணியன் பணிக்கு சென்று விட்டார். வெள்ளிக்கிழமை அதிகாலை சுப்பிரமணியன் பணியை முடித்துக் கொண்டு வீடு திரும்பினார்.
     அப்போது வீட்டின் ஓடு பிரிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 6 பவுன் நகை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
    இதுகுறித்து நாமக்கல் போலீஸில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai