Enable Javscript for better performance
மரவள்ளிக் கிழங்கு விலை சரிவு- Dinamani

சுடச்சுட

    

    பரமத்தி வேலூர் வட்டத்தில் மரவள்ளிக் கிழங்கின் விலை டன்னுக்கு ரூ.500 வரை விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    பரமத்தி வேலூர் வட்டத்தில் எஸ்.வாழவந்தி, பெரியகரசபாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதூர், சோழசிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது. 
    இப்பகுதிகளில் விளைவிக்கப்படும் மரவள்ளிக் கிழங்குகள் புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மரவள்ளிக் கிழங்கு அரைவை ஆலைக்கு அனுப்பப்படுகின்றன.
    கிழங்கிலிருந்து ஜவ்வரிசி, கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும், சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் மரவள்ளிக் கிழங்கை வாங்கிச் செல்கின்றனர். மரவள்ளிக் கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளர்கள் மரவள்ளிக் கிழங்கில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர். 
    கடந்த வாரம் மரவள்ளிக் கிழங்கு டன்னுக்கு ரூ.5,500 வரை விற்கப்பட்ட நிலையில்,  தற்போது ரூ.5 ஆயிரத்துக்கு மட்டுமே விற்பனையாகிறது. மரவள்ளி கிழங்கின் விலை சரிவடைந்துள்ளதால் மரவள்ளிக் கிழங்கு பயிரிட்டுள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai