Enable Javscript for better performance
முருகன் கோயில்களில் பங்குனி உத்திர திருவிழா- Dinamani

சுடச்சுட

    

    நாமக்கல், பரமத்திவேலூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முருகன் கோயில்களில் வெள்ளிக்கிழமை பங்குனி உத்திரத் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
    பரமத்தி வேலூர் வட்டாரத்தில் பாலப்பட்டி கதிர்காமத்து கதிர்மலை பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலில் 36-ஆம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழா கடந்த 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 29- ஆம் தேதி வரை நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
    வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு பக்தர்கள் காவிரி ஆற்றுக்குச் சென்று புனித நீராடி பால்காவடி, பன்னீர் காவடி,புஷ்ப காவடிகளை ஊர்வலமாக எடுத்து வந்து தங்களது நேர்த்திக் கடனைச் செலுத்தினர். நண்பகல் 1 மணிக்கு சிறப்பு வழிபாடுகளும்,  2 மணிக்கு மகேஸ்வர பூஜையும், இரவு 7 மணிக்கு வான வேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
    சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெறுகிறது. ஏப்ரல் 1- ஆம் தேதி மாலை அன்னை சீதா காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், இடும்பர் பூஜையும் நடைபெறுகிறது. ஏப்ரல் 2- ஆம் தேதி மாலை திருவிடையாற்று பூஜை நடைபெறுகிறது. 
    இதேபோல கபிலர்மலை முருகன் கோயில்,பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோயிலில் உள்ள  சுப்பிரமணியர்,பொத்தனூர் பச்சமலை முருகர் கோயில்,அனிச்சம்பாளையம் சுப்பிரமணியர் மற்றும் பரமத்தி வேலூர் பேட்டை பகவதி அம்மன் கோயிலில் உள்ள பாலமுருகன் கோயில்களில் பங்குனி உத்திர விழா விமரிசையாக நடைபெற்றது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai