Enable Javscript for better performance
அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை- Dinamani

சுடச்சுட

    

    அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை

    By DIN  |   Published on : 18th May 2018 08:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சேந்தமங்கலத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் ஆர்.ஆர்.பி.சுரேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 2 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார். 
     நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே உள்ள மலைவேப்பன்குட்டை, வெட்டுக்காட்டைச் சேர்ந்தவர் ஆர்.ஆர்.பி.சுரேஷ். இவர் அதிமுக அம்மா பேரவை சேந்தமங்கலம் ஒன்றிய செயலராக இருந்து வந்தார். இவர் கடந்த மார்ச் மாதம் 20ஆம் தேதி வீட்டுக்கு செல்லும் வழியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.  
    இந்த சம்பவம் தொடர்பாக மலைவேப்பன்குட்டை, மந்திரி தோட்டத்தைச் சேர்ந்த விமல்குமார் (28) மற்றும் வெட்டுக்காட்டைச் சேர்ந்த சிவக்குமார் (44) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.  இருவரும் தற்போது சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 
    இந்தநிலையில், நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு பரிந்துரையின் பேரில் இருவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து மாவட்ட மு.ஆசியா மரியம் உத்தரவிட்டார். அதற்கான நகலை சேலம் மத்திய சிறையில் போலீஸார் வழங்கினர்.
    கள்ளச்சாராய வழக்கில்....: ராசிபுரம் வட்டம், முள்ளுக்குறிச்சி அருகே உள்ள ஊனாந்தாங்கல் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்டதாக கடந்த 5ஆம் தேதி ஊனாந்தாங்கல், கொளக்கமேட்டை சேர்ந்த சதீஷ்குமார் (23) மற்றும் முருகேசன் (26) ஆகியோரை மதுவிலக்கு போலீஸார் கைது செய்தனர். 
    இதில் கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி மற்றும் மே மாதம் 5ஆம் தேதி என இருவேறு நாள்களில் மொத்தம் 1,600 லிட்டர் சாராய ஊரலும், 50 லிட்டர் சாராயமும் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டது. இருவர் மீதும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதைத்தொடர்ந்து, நாமக்கல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இருவரும் சேலம் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai