Enable Javscript for better performance
ஆஞ்சநேயர் கோயில் உண்டியல் திறப்பு: பக்தர்கள் ரூ.49.39 லட்சம் காணிக்கை- Dinamani

சுடச்சுட

    

    ஆஞ்சநேயர் கோயில் உண்டியல் திறப்பு: பக்தர்கள் ரூ.49.39 லட்சம் காணிக்கை

    By DIN  |   Published on : 18th May 2018 08:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் உண்டியல் வியாழக்கிழமை திறக்கப்பட்டது. பக்தர்கள் ரூ.49.39 லட்சம் காணிக்கை செலுத்தி இருந்தனர். 
    நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் உண்டியல்கள் 3 மாதங்களுக்கு ஒருமுறை திறந்து காணிக்கை பணம் எண்ணப்படும். அதேபோல், உண்டியல் திறக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர்கள் பி.ரமேஷ், தமிழரசு, தக்கார் ரெ.சா.வெங்கடேசன், ஆய்வாளர் அம்சா ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது. அதில் இருந்த பணம் கோயிலுக்கு வந்த பக்தர்கள், தன்னார்வலர்கள், வங்கிப் பணியாளர்கள் மூலம் எண்ணப்பட்டது. 
    அதில் ரூ.49,39,010 பணம், 9 கிராம் தங்கம், 740 கிராம் வெள்ளி இருந்ததாக கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai