Enable Javscript for better performance
ஊதிய உயர்வு கோரி வருவாய்த் துறைஅலுவலர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஊதிய உயர்வு கோரி வருவாய்த் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 18th May 2018 08:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தலைமை செயலக அலுவலர்களுக்கு இணையாக ஊதியம் வழங்கக் கோரி நாமக்கல்லில் வருவாய்த் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
     தமிழ் மாநில வருவாய்த் துறை அலுவலர் சங்கம் சார்பில் 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை மாலை நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் தமிழ்மணி தலைமை வகித்தார். பொருளாளர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். செயலர் சந்திரசேகரன் வரவேற்றார். தமிழ்நாடு கிராம உதவியாளர் சங்க மாநிலத் தலைவர் வீராசாமி, சங்க மாநில துணைத் தலைவர் ரகுநாதன் ஆகியோர் பேசினர்.  
     வருவாய்த் துறையினரின் பணித் தன்மையைக் கருத்தில் கொண்டு அதனை சிறப்பு  துறையாக அறிவிப்பதோடு, தலைமை செயலக அலுவலர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும், பணி நிமித்தமாக சென்னை வரும் அலுவலர்களுக்கு தங்கும் விடுதி அமைக்க வேண்டும். 
     குறுவட்ட வருவாய் ஆய்வாளர் முதல் மாவட்ட வருவாய் அலுவலர் வரை செல்லிடப்பேசிகளுக்கு மாதாந்திர கட்டண தொகையை உயர்த்த வேண்டும். குறுவட்ட  வருவாய் ஆய்வாளர்களுக்கு மாதாந்திர நிரந்தர பயணப்படியை உயர்த்த வேண்டும்.  பதிவறை எழுத்தர்களுக்கு ஊதியக் குழுவில் மறுக்கப்பட்ட தர ஊதியத்தை வழங்க வேண்டும். 
     கள ஆய்வுப் பணிக்கு சமூகப் பாதுகாப்புத் திட்ட பிரிவுக்கு எனத் தனியாக முதுநிலை வருவாய் ஆய்வாளர் பணியிடமும், அரசால் அறிவிக்கப்பட்ட அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் வரவேற்பு வட்டாட்சியர் மற்றும் துணை வட்டாட்சியர் பணியிடங்களை தோற்றுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர்.  மாவட்ட  துணைத் தலைவர் சரவணக்குமார் நன்றி கூறினார்

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai