Enable Javscript for better performance
எக்ஸல் கல்லூரியில் பொறியியல், பாலிடெக்னிக் மாணவர்களுக்கு கல்வி கட்டண சலுகை- Dinamani

சுடச்சுட

    

    எக்ஸல் கல்லூரியில் பொறியியல், பாலிடெக்னிக் மாணவர்களுக்கு கல்வி கட்டண சலுகை

    By DIN  |   Published on : 18th May 2018 08:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குமாரபாளையம் எக்ஸல் கல்லூரியில் பொறியியல், பாலிடெக்னிக் மாணவர்களுக்கு கல்வி கட்டண சலுகை அளிக்கப்படவுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் ரூ.4.14 கோடி அளவுக்கு கல்வி உதவித்தொகை அளிக்கப்பட்டுள்ளது என எக்ஸல் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஏ.கே.நடேசன் தெரிவித்தார்.
     இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: பொறியியல்,பாலிடெக்னிக் படிக்கும் மாணவர்களுக்கு குமாரபாளையம் எக்ஸல் கல்வி நிறுவனங்கள் கட்டணச் சலுகைகள், கல்வி உதவித்தொகைகள் என கடந்த கல்வியாண்டில் மாணவ,மாணவிகளுக்கு ரூ.4.14 கோடி அளவுக்கு சலுகை அளித்துள்ளது. அகரம் அறக்கட்டளை, ரோட்டரி சங்கங்கள், தஞ்சாவூர் மதர் தெரசா பவுண்டேசன் சார்பில் முழு கட்டணச் சலுகை அளிக்கப்படுகிறது.  மேலும் குடும்பத்தில் முதல் பட்டதாரி மாணவ, மாணவிகளுக்கு ரூ.20,000 கட்டணச் சலுகை அரசு மூலம் அளிக்கப்படுகிறது. 
     டிப்ளமோ படித்த மாணவிகளுக்கு நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேரும் போது ஆண்டுக் கட்டணம் ரூ.30,000 மட்டுமே பெறப்படுகிறது.  மேலும், பல்வேறு சலுகைகளும் மதிப்பெண் அடிப்படையில் வழங்கப்படுகின்றன.  சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு ரூ.20,000 கல்விக் கட்டணச் சலுகை அளிக்கப்படுகிறது. 
    எக்ஸல் கல்வி உதவித் திட்டம்:
     பொறியியல் முதலாமாண்டு மாணவ, மாணவிகளில் 80 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு முழுக் கட்டணச் சலுகை 4 ஆண்டுகளுக்கும் அளிக்கப்படுகிறது. பிளஸ் 2 பொதுத் தேர்வில் 70 சதவீதம் மற்றும் அதற்கு மேலும் மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் ரூ.35,000 மட்டுமே பெறப்படுகிறது.   
    முதலாமாண்டில் சேரும் மாணவ, மாணவிகளில் 60 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண்கள் பெறும் 4 ஆண்டுகளிலும் கல்விக் கட்டணம் ரூ.45,000 மட்டுமே பெறப்படுகிறது. இதில் முதல் பட்டதாரிகளுக்கு அரசு உதவித்தொகையாக ரூ.25,000  பெற உதவி செய்யப்படுகிறது.  மேலும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இன மாணவர்கள் அரசு உதவித்தொகையும் பெற ஆலோசனை வழங்கப்படுகிறது.  
    இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேரும் மாணவர்களுக்கு 90 சதவீதம் அதற்கு மேலும் மதிப்பெண் பெறுவோருக்கு முழுக் கட்டணச் சலுகையும், 80 சதவீதம் அதற்கு மேலும் மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் ரூ.35,000,  60 சதவீதம் அதற்கு மேலும் மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் ரூ.40,000 மட்டுமே பெறப்படுகிறது.
    டிப்ளமோ மாணவர்களுக்கு...:
     டிப்ளமோ படிக்க விரும்பும் மாணவர்களில் 450 மதிப்பெண்கள் அதற்கு மேலும் மதிப்பெண்கள் பெற்றோருக்கு முழுக்கல்விக் கட்டண சலுகையும், 425 முதல் 449 மதிப்பெண்கள் பெற்றோருக்கு 75 சதவீத கல்விக் கட்டணமும், 375 முதல் 424 மதிப்பெண்கள் பெற்றோருக்கு 50 சதவீத கல்விக் கட்டணமும், 350 முதல் 374 மதிப்பெண்கள் பெற்றோருக்கு 25 சதவீத கல்விக் கட்டணமும் மட்டுமே பெறப்படுகிறது. அதேபோல்,  அனைத்து மாணவியருக்கும் பொறியியல் படிப்புக்காக ஆண்டுக் கட்டணமாக அதிகபட்சமாக ரூ.40,000 மட்டுமே பெறப்படுகிறது.  பிளஸ் 2 தேர்வில் 60 சதவீதம் அதற்கு மேலும் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் எலக்ட்ரானிக்ஸ் டிப்ளமோ பாடப் பிரிவில் சேரும் போது ஒரு பருவ கல்விக் கட்டணம் ரூ.10,000 மட்டுமே பெறப்படுகிறது. 
    பொறியியல் பாடப் பிரிவுகள்,டிப்ளமோ சேரும் மாணவர்களுக்கு முழுக் கல்விக் கட்டணச் சலுகை உள்பட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தாழ்த்தப்பட்ட, மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் சார்பாக வழங்கப்படும் உதவித்தொகை மூலம் 4 ஆண்டுகளுக்கும் இலவச கல்வியுடன், இலவச பேருந்து வசதியும் தரப்படுகிறது.
    இதுதொடர்பான விவரங்களுக்கு எக்ஸல் கல்வி நிறுவனங்களின் கல்வி உதவித் திட்ட அதிகாரி சரவண பிரசாத் என்பவரை 9842713789  என்ற எண்ணிலோ அல்லது கல்லூரி பேருந்து மூலம் இலவசமாக பயணித்து அட்மிஷன் அலுவலரை கல்லூரியில் நேரில் சந்தித்தோ தகுந்த ஆலோசனை பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai