Enable Javscript for better performance
காவல் நிலையம் முன்முழக்கமிட்டவர்கள் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    திருச்செங்கோட்டில் காவல் நிலையம் முன்பு முழக்கமிட்டவர்கள் மீது வழக்குப் பதிவு  செய்யப்பட்டுள்ளது.
    திருச்செங்கோட்டில் புதன்கிழமை ஆதித்தமிழர் கட்சியைச் சேர்ந்த இரண்டு நிர்வாகிகளை காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றனர். அப்போது  ஆதித்தமிழர் கட்சி மேற்கு மாவட்டச் செயலாளர் அறிவழகன், பேரவை செயலாளர் சரவணன், கார்த்திகை முருகன், லோகேஷ்குமார், செல்வ வில்லாளன் உள்ளிட்ட நிர்வாகிகளும், தொண்டர்களும் திருச்செங்கோடு நகர காவல் நிலையம் முன்பு கூடி போலீஸாரின் நடவடிக்கையைக் கண்டித்து முழக்கமிட்டனர். 
    பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படும்படி அவர்கள் நடந்து கொண்டதாக கிராம நிர்வாக அலுவலர் மணிவண்ணன் நகரக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் 10-க்கும் மேற்பட்டவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai