Enable Javscript for better performance
குட்டை நீரில் மூழ்கிமாணவர் உயிரிழப்பு- Dinamani

சுடச்சுட

    

    ராசிபுரத்தை அடுத்த ஆயிபாளையத்தில் உள்ள குட்டையில் தவறி விழுந்து பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் தமிழரசு (16) உயிரிழந்தது குறித்து புதுசத்திரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    ராசிபுரத்தை அடுத்துள்ள ஆயிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். லாரி ஓட்டுநர். இவரது மகன் தமிழரசு (16),  தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், தமிழரசு தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து ஆயிபாளையத்தில் உள்ள நீர் நிரம்பிய குட்டையில் குளிக்கச் சென்றார். 
    அப்போது எதிர்பாராத விதமாக தமிழரசு தவறி விழுந்து நீரில் முழ்கி உயிரிழந்தார். பின்னர் அருகில் இருந்தவர்கள் தமிழரசுவின் சடலத்தை மீட்டனர். 
    ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு மருத்துவப் பரிசோதனைக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து புதுசத்திரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai