Enable Javscript for better performance
குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில்மே 30-ம் தேதி வரை விண்ணப்பம் விநியோகம்- Dinamani

சுடச்சுட

    

    குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் மே 30-ம் தேதி வரை விண்ணப்பம் விநியோகம்

    By DIN  |   Published on : 18th May 2018 08:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் இளநிலைப் படிப்புகளுக்கான  மாணவ, மாணவியர் சேர்க்கை விண்ணப்பங்கள் மே 30-ம் தேதி வரையில் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    இந்தக் கல்லூரியில், பி.ஏ தமிழ், பி.ஏ. ஆங்கிலம், பி.எஸ்ஸி., கணிதம், பி.எஸ்ஸி., இயற்பியல், பி.எஸ்ஸி., வேதியியல், பி.எஸ்ஸி., கணினி அறிவியல், பி.காம்., மற்றும் பி.பி.ஏ., (வணிக நிர்வாகவியல்) பாடப் பிரிவுகளுக்கு கடந்த 2-ம் தேதி முதல் விண்ணப்பங்கள் கல்லூரி அலுவலகத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மாதம் 30-ம் தேதி வரையில் விண்ணப்பங்கள் வழங்கப்படும்.
    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கல்லூரியில் சமர்பிக்க கடைசி நாள் 30.05.2018 மாலை 5.00 மணி. விண்ணப்பத்தின் விலை ரூ.50. தாழ்த்தப்பட்ட மற்றும்  பழங்குடியின மாணவ, மாணவியர் ரூ.2 செலுத்தி (சாதிச் சான்றிதழ் நகல் வழங்க வேண்டும்) பெற்றுக் கொள்ளலாம். மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை மதிப்பெண்கள் 31-ம் தேதி வெளியிடப்பட்டு, மாணவர் சேர்க்கை ஜூன் 1-ம் தேதி முதல்  நடைபெறும் என முதல்வர் (பொ) மு.ரகுபதி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai