Enable Javscript for better performance
கேரம் விளையாட்டுஅலுவலகம் திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    கேரம் விளையாட்டை ஊக்குவிக்கவும், கிராமப்புற மாணவர்களுக்கு எளிதாக எடுத்துச் செல்லும் வகையில் நாமக்கல் மாவட்ட கேரம் அசோசியேசன் தலைமை அலுவலகம் குமாரபாளையத்தில் புதன்கிழமை திறக்கப்பட்டது. 
    நாமக்கல் மாவட்ட கேரம் அசோசியேசன் தலைமை அலுவலகம், குமாரபாளையம் - சேலம் சாலையில் உள்ள நம்ம குமாரபாளையம் அலுவலக வளாகத்தில்  திறக்கப்பட்டுள்ளது. சங்க அலுவலகத்தை ஜே.கே.கே. நடராஜா கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் எஸ்.ஓம் சரவணா திறந்து வைத்தார். 
    கிராமப்புறங்களில் கேரம் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளதாகவும், கேரம் விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவ, மாணவிகளைக் கண்டறிந்து, அவர்களுக்குத் தேவையான பயிற்சியும், வழிகாட்டுதலும் வழங்கப்படும். மேலும், இங்கு வந்து விளையாடியும் பயன்பெறலாம் என விழாவில் தெரிவிக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai