Enable Javscript for better performance
தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் மன்றக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் மன்றத்தில் நிர்வாகிகள் கூட்டம் ராசிபுரத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மன்றத்தின் மாவட்டச் செயலர் முருக.செல்வராஜன் தலைமை வகித்தார். மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கு.பாரதி, நாமகிரிப்பேட்டை வட்டாரத் தலைவர் சு.சிதம்பரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
    சேலம் மாநகராட்சிக்குரிய வீட்டு வாடகைப்படி, நகர ஈட்டுப்படி போன்றவற்றை ராசிபுரம், வெண்ணந்தூர்,நாமகிரிப்பேட்டை ஒன்றியப் பகுதியில் பணியாற்றும் ஆசிரியர்கள், அரசு அலுவலர்களுக்கு அரசின் உத்தரவுப்படி வழங்க வேண்டும் என வலியுறுத்தி, மே 18-ல் நடைபெறுவதாக இருந்த உண்ணாவிரதப் போராட்டத்தை ஒத்துவைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் திரளான மன்ற நிர்வாகிகள் பங்கேற்றனர்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai