Enable Javscript for better performance
திமுகவின் வாக்குச்சாவடி முகவர்கள் தேர்வு குறித்த ஆலோசனைக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    திமுகவின் வாக்குச்சாவடி முகவர்கள் தேர்வு குறித்த ஆலோசனைக் கூட்டம்

    By DIN  |   Published on : 18th May 2018 08:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வாக்குச்சாவடிகளுக்கு முகவர்களை தேர்வு செய்ய நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் 4 நாள்கள் திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
    இதுகுறித்து மாவட்ட திமுக பொறுப்பாளர் பார்.இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கை:  நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் உள்ள 798 வாக்குச்சாவடிகளுக்கும், முகவர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். 
    முதல் கட்டமாக நகரங்களில் உள்ள வார்டு செயலர் மற்றும் ஒன்றியங்களில் உள்ள ஊராட்சி செயலர்களை நேரில் சந்தித்து, அதற்கான விளக்கங்கள், படிவங்கள் வழங்கப்பட உள்ளன. அதற்காக நகர, ஒன்றிய, பேரூராட்சி வாரியாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. 
    ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தகவல் தொழில்நுட்பம் தெரிந்த ஒருவரை கட்டாயம் நியமிக்க வேண்டும். அந்தந்த ஒன்றியத்துக்குள்பட்ட பேரூராட்சி செயலர்கள் அந்தந்த ஒன்றியங்களில் கலந்து கொள்ள வேண்டும். நகர, ஒன்றிய, பேரூராட்சி செயலர்களும், வார்டு செயலாளர்கள் மற்றும் ஊராட்சி செயலர்களையும் தவறாமல் அவசியம் பங்கெடுக்கச் செய்ய வேண்டும். 
    இதன்படி 18ஆம் தேதி மாலை 4 மணிக்கு நாமக்கல் நகரம், 19ஆம் தேதி  காலை 10 மணிக்கு நாமக்கல் ஒன்றியம், காலை 11 மணிக்கு மோகனூர் ஒன்றியம், மாலை 4 மணிக்கு புதுச்சத்திரம் தெற்கு ஒன்றியம், மாலை 5 மணிக்கு புதுச்சத்திரம் வடக்கு ஒன்றியத்திலும் கூட்டம் நடைபெறும். 
    20ஆம் தேதி காலை 10 மணிக்கு எருமப்பட்டி ஒன்றியம், 11 மணிக்கு சேந்தமங்கலம் ஒன்றியம், 1 மணிக்கு கொல்லிமலை ஒன்றியம், 21ஆம் தேதி  காலை 10 மணிக்கு வெண்ணந்தூர் ஒன்றியம்,  11 மணிக்கு ராசிபுரம் ஒன்றியம், 12 மணிக்கு ராசிபுரம்  நகரம், மாலை 4 மணிக்கு  நாமகிரிப்பேட்டை ஒன்றியம் ஆகிய இடங்களில் நடைபெறும்.  இந்த ஆலோனைக் கூட்டங்களில் நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai