Enable Javscript for better performance
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு கோரி  ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு கோரி  ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 18th May 2018 08:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்க வலியுறுத்தி மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
     தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்க நாமக்கல் சுகாதார மாவட்ட கிளை சார்பில் 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. சங்க மாவட்ட துணைத் தலைவர் டாக்டர் மோகன் தலைமை வகித்தார். தலைவர் டாக்டர் ரங்கசாமி முன்னிலை வகித்தார். துணைச் செயலர் டாக்டர் மகேஷ்குமார் பேசினார்.  நிகழாண்டுக்கான முதுநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கையில் அரசு மருத்துவர்கள் பயன்பெறும் வகையில், தகுதித் தேர்வில் சிறப்பு மதிப்பெண் வழங்க வேண்டும். நிரந்தரத் தீர்வாக அரசு மருத்துவர்கள் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர 50 சத இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டப்பேரவையில் சட்டம் இயற்ற வேண்டும். 
     நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்கும் சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற மாநில அரசு விரைந்து நடவடிக்கையெடுக்க வேண்டும். 
     அரசு மருத்துவர்களுக்கு மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம், நிர்வாகப்படி, பிற ஊதியப்படிகளை வழங்கவும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தவும் வேண்டும். மாநில, மாவட்ட அளவில் உள்ள துறைரீதியான மருத்துவ அலுவலர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் முழக்கம் எழுப்பினர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai