Enable Javscript for better performance
ப்ளஸ் 2:  எஸ்ஆர்வி மகளிர் பள்ளி மாணவியர் சிறப்பிடம்- Dinamani

சுடச்சுட

    

    ராசிபுரம் எஸ்ஆர்வி மகளிர் பள்ளி மாணவியர், எஸ்ஆர்வி எக்ஸெல் பள்ளியின் மாணவ, மாணவியர் ப்ளஸ் டூ தேர்வில் சிறப்பிடம் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    எஸ்ஆர்வி பெண்கள் பள்ளியில் தேர்வு எழுதிய மாணவியர்களில் 27 பேர் கணிதப் பாடத்தில் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். கணினி அறிவியல் பாடத்திலும், வேதியியல் பாடத்திலும் தலா ஒரு மாணவி 100 சதம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றனர். பள்ளி மாணவி ஒருவர் 1200-க்கு 1170 மதிப்பெண் பெற்றார். 1160 மதிப்பெண்களுக்கு மேல் 7 பேரும், 1150-க்கு மேல் 14 பேரும், 1125-க்கு மேல் 27 பேரும், 1100-க்கு மேல் 57 பேரும், 1000-க்கு மேல் 192 மாணவியரும் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
    எஸ்ஆர்வி எக்ஸெல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12 மாணவ, மாணவியர் கணிதத்தில் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றனர். வேதியியல் பாடத்தில் இருவர் 200-க்கு 200 பெற்றுள்ளனர். 1200-க்கு 1160 மதிப்பெண்களுக்கு மேல் இருவரும், 1150-க்கு மேல் மூவரும், 1100-க்கு மேல் 31 பேரும், 1000-க்கு மேல் 86 பேரும் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியரை பள்ளி நிர்வாகிகள் ஆர்.துரைசாமி,  இ.தங்கவேல், ஆர்.மனோகரன், பி.வஜ்ரவேல், கே.என்.சுப்பிரமணியன், பள்ளி முதல்வர், தலைமையாசிரியர் ஆகியோர் பாராட்டினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai