Enable Javscript for better performance
மானாவாரி வேளாண் இயக்கத் திட்ட செயல்விளக்கக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மல்லசமுத்திரம் வட்டாரத்தில் உள்ள ராமாபுரம், கருங்கல்பட்டி, பருத்திப் பள்ளி, வண்டிநத்தம் ஆகிய கிராமங்களில் நீடித்த நிலையான மானாவாரி வேளாண் இயக்கத் திட்டத்தில் செயல் விளக்கக் கூட்டம் நடைபெற்றது. 
    மல்லசமுத்திரம் வேளாண் உதவி இயக்குனர் சண்முகம் தலைமை வகித்து மானியத் திட்டங்கள் குறித்து விளக்கினார். விதைப்புக்குத் தேவையான நிலக்கடலை, பாசிப்பயறு 50 சதவீத மானியத்திலும், ஆயிரம் ஹெக்டேர் பரப்புள்ள நிலங்களுக்கு நுண்சத்து, உயிரி உரங்கள் 50 சதவீத மானியத்திலும்  வழங்கப்பட உள்ளன. கூட்டத்தில் துணை வேளாண் அலுவலர் ராமசாமி, உதவி மேளாண் அலுவலர் மோகன்,  அலுவலர் கிரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai