Enable Javscript for better performance
மே 21 முதல் ஒட்டுமொத்த விடுப்பு:தொடக்கக் கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள் அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    மே 21 முதல் ஒட்டுமொத்த விடுப்பு: தொடக்கக் கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள் அறிவிப்பு

    By DIN  |   Published on : 18th May 2018 08:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் மே 21ஆம் தேதி முதல் ஒட்டுமொத்த விடுப்பில் செல்ல முடிவு செய்துள்ளனர். 
     இதுகுறித்து தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்க மாவட்டச் செயலர் கருப்பண்ணன் தலைமையில்,  ஆட்சியர் அலுவலகத்தில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியத்திடம் வியாழக்கிழமை அளித்த மனு விவரம்:  தொடக்கக் கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகம் தேர்தல் நடவடிக்கைகளால் முடங்கியுள்ளது. இதுவரை சங்கத்தின் பணியாளர்கள் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர்.  பொதுமக்கள் மற்றும் சங்கத்தின் நம்பகத்தன்மை கேள்விக்குறியான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஆனால்,  இப்போது வரை நிர்வாகம் தொய்வின்றி நடைபெற எந்தவிதத் தீர்வும் காணப்படவில்லை.  எனவே, இப் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில், தமிழக அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும்.  இந்தநிலை தொடரும்பட்சத்தில்,  சங்கப் பணியாளர்கள் மே 21ஆம் தேதி முதல் ஒட்டுமொத்த விடுப்பில் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai