Enable Javscript for better performance
லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தபோராட்டத்துக்கு ஆதரவு: எம்.ஆர்.குமாரசாமி- Dinamani

சுடச்சுட

    

    லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு: எம்.ஆர்.குமாரசாமி

    By DIN  |   Published on : 18th May 2018 08:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அறிவித்துள்ள லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் எம்.ஆர்.குமாரசாமி தெரிவித்தார். 
    டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயிக்கும் முறையைக் கைவிட வேண்டும். சுங்க சாவடிகளில் ஆண்டுக்கு ஒரு முறை கட்டணம் செலுத்தும் முறையைக் கொண்டு வர வேண்டும். மூன்றாம் நபர் காப்பீட்டு பிரீமியக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 20 ஆம் தேதி முதல் நாடு தழுவிய அளவில் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் புதுதில்லியில் வியாழக்கிழமை அறிவித்துள்ளது. 
    இதுகுறித்து தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் எம்.ஆர்.குமாரசாமி தெரிவித்தது: அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அறிவித்துள்ள லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு முழு ஆதரவை தெரிவித்துக்கொள்கிறோம். 
    ஜூலை 20 ஆம் தேதி தொடங்கும் காலவரையற்றப் போராட்டத்தில் தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவோம். அகில இந்திய மோடடார் காங்கிரஸ் கோரியுள்ள இந்த 3 மூன்று பிரதான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட மத்திய அரசு நடவடிக்கையெடுக்க வேண்டும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai