Enable Javscript for better performance
வளர்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட இருக்கூர், கோப்பணம்பாளையம், கொந்தளம், சேளூர்,  தி.கவுண்டம்பாளையம் ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ. 3 கோடியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் ஆய்வு செய்தார்.
     இருக்கூர் ஊராட்சியில் ரூ. 62.18 லட்சம் மதிப்பீட்டில் தார்ச் சாலை அமைத்தல் பணிகளையும், அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் தலா ரூ. 1.70 லட்சம் மானியத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டு வீடுகளையும், கோப்பணம்பாளையம் ஊராட்சிப் பகுதியில் ரூ. 16.34 லட்சம் மதிப்பீட்டில்  தரைமட்ட குடிநீர் தேக்கத்தொட்டி அமைக்கப்பட்டு, குடிநீர் விநியோகிக்கப்பட்டு வரும் பணிகளையும் ஆய்வு செய்தார். 
    மேலும், கொந்தளம் ஊராட்சிக்கு உட்பட்ட வேலாகவுண்டம்பாளையம் முதல் நெட்டையாம்பாளையம் வரையிலும், நெட்டையாம்பாளையத்தில் இருந்து சிறுகிணத்துபாளையம் வரை  ரூ.14.61 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் தார்ச் சாலைப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் நேரில் ஆய்வு செய்தார். ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குனர் மாலதி, கபிலர்மலை வட்டார வளர்ச்சி அலுவலர் மணிமேகலை, ஒன்றிய பொறியாளர் கலாநிதி, உதவிப் பொறியாளர் ரவி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai