தரமான சான்று விதைகள் உற்பத்தி செய்வது குறித்த பயிற்சி

தரமான சான்று விதைகள் உற்பத்தி செய்வது குறித்த பயிற்சி உதவி விதை அலுவலர்களுக்கு  அளிக்கப்பட்டது. 

தரமான சான்று விதைகள் உற்பத்தி செய்வது குறித்த பயிற்சி உதவி விதை அலுவலர்களுக்கு  அளிக்கப்பட்டது. 
வேளாண்மைத் துறையின் மூலம் தரமான சான்று பெற்ற விதைகள் ஆண்டு தோறும் நாமக்கல் மாவட்டத்திலுள்ள விவசாயிகளுக்கு அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 
 நிகழாண்டில் அரசு சான்று விதைகள் உற்பத்தி களப்பணி மேற்கொள்ளும்,  புதியதாக பணியில் சேர்ந்த உதவி விதை அலுவலர்களுக்கு வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் தரமான சான்று விதைகள் உற்பத்தி குறித்த பயிற்சி விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்றளிப்பு துறை மூலம் அளிக்கப்பட்டது. 
நிகழ்ச்சியில்,  உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநர் அசோகன்,   நாமக்கல் மாவட்டத்தில் நடைமுறைபடுத்தப்படும் விதைப் பெருக்கத் திட்டம் குறித்து கூறினார். நாமக்கல் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ஜெ.சேகர் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து,  தரமான சான்று விதைகள் உற்பத்தி மற்றும் விநியோகத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
நாமக்கல் மாவட்ட விதைச் சான்று உதவி இயக்குநர் ஜெகதீசன்   விதைப் பண்ணைகள் பதிவு செய்தல், விதைப் பண்ணைகள் கள ஆய்வு மேற்கொள்வது,   விதை மாதிரிகள் எடுப்பது, விதை ஆய்வறிக்கை வழங்குவது மற்றும் பகுப்பாய்வில் தேறிய விதைக் குவியல்களுக்கு சிப்பமிட்டு சான்றட்டை பொருத்துதல் குறித்து பயிற்சியளித்தார். 
மேலும், இப் பயிற்சியில் விதைச்சான்று நடைமுறைப் பணிகளை இணையத்தில் பதிவுகள் மேற்கொள்வது குறித்து விதைச் சான்று அலுவலர்கள் ஜெயக்குமார்,  ராஜ்குமார் ஆகியோர்
பயிற்சியளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com