பரமத்தி வேலூர் காவிரி ஆற்றில் பேரிடர் மேலாண்மை செயல்விளக்க ஒத்திகை

பரமத்தி வேலூர் காவிரி ஆற்றில் தீயணைப்பு மீட்புத் துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் தலைமையில்

பரமத்தி வேலூர் காவிரி ஆற்றில் தீயணைப்பு மீட்புத் துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் தலைமையில் பேரிடர் மேலாண்மை செயல் விளக்க ஒத்திகை வியாழக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் தீயணைப்பு மீட்புத் துறையின் சார்பில் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் தலைமையில் நடைபெற்ற போரிடர் மேலாண்மை செயல் விளக்க ஒத்திகையில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெண்ணை மீட்பது, அவரை இரப்பர் படகு மூலம் கரைக்கு கொண்டுவரும் முறை, பின்னர் அவரை 108 அவசர ஊர்தி வாகனத்தில் முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லுதல் குறித்து பொதுமக்கள் முன்பு செய்து காண்பிக்கப்பட்டது. 
பருவ மழைக் காலங்களில் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டால் வீடுகளில் இருந்து பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற வீடுகளில் உள்ள பொருட்களை வைத்து வெள்ளத்தில் இருந்த தப்பிப்பது,  வாழை மட்டை,  தண்ணீர், எண்ணெய் புட்டிகள் மூலம் அமைக்கப்பட்ட வலைகள் ஆகியவற்றைக்கொண்டு மீட்பு குறித்த செயல்விளக்க ஒத்திகை செய்து காண்பிக்கப்பட்டது.  மேலும் வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டால் வீடுகளில் குழந்தைகள், பெரியவர்கள், விலை மதிப்பற்ற பொருட்களை தீ எரிந்து கொண்டிருக்கும் போது தீயணைப்புத் துறையினர் அலுமினியத்தால் ஆன கவச உடை அணிந்து சென்று மீட்டு வருவது குறித்து செயல்விளக்கம் மூலம் செய்து காண்பிக்கப்பட்டது. 
      ஒத்திகை நிகழ்ச்சியில் 40க்கும் மேற்பட்ட தீயணைப்பு நிலைய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு செயல் விளக்கம் அளித்தனர்.  மேலும் வேலூர் பேரூராட்சி சார்பில் சுத்தம், சுகாதாரம் மற்றும் பயனற்ற பொருட்களை கொண்டு தயார் செய்யப்பட்ட கண்காட்சியை பொதுமக்கள் பார்வைக்கு வைத்திருந்தனர். 
இந் நிகழ்ச்சியில்,  மாவட்ட தீயணைப்பு அலுவலர் அழகர்சாமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் கண்ணன், தீயணைப்பு துறை நிலைய அலுவலர்கள்,பரமத்தி வேலூர் வட்டாட்சியர் மற்றும் வருவாய் துறையினர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com