தலைக்கவசம் குறித்த விழிப்புணர்வு பேரணி

பரமத்திவேலூர் ஜேசிஐ, பரமத்திவேலூர் காவல்துறை சார்பில், தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பரமத்திவேலூர் ஜேசிஐ, பரமத்திவேலூர் காவல்துறை சார்பில், தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் தொடங்கிய இருசக்கர வாகனப் பேரணிக்கு இருசக்கர வாகனம் ஓட்டுவதில் தேசிய சாதனை படைத்த சைபிமேத்யூ  தலைமை வகித்துப் பேரணியில் கலந்து கொண்டார். பரமத்தி வேலூர்  ஜேசிஐ தலைவர் தேவாசெங்கோட்டுவெலு வரவேற்றார். பரமத்தி காவல் ஆய்வாளர் செந்தில்குமார், பரமத்தி வேலூர் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் நித்தியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பரமத்திவேலூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜு கொடியசைத்துப் பேரணியைத் தொடக்கி வைத்தார். ஊர்வலத்தில் இருசக்கர வாகனங்களில் செல்லும்போது தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம், இருசக்கர வாகனத்தில் செல்லும்போது செல்லிடைப்பேசியில் பேசுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுத்தும் வகையில், பொதுமக்களிடையே இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பேரணி பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே தொடங்கி பரமத்தி கடைவீதி, கபிலர்மலை சாலை, சுண்டப்பனை சாலை பரமத்திவேலூர் கந்தசாமி கண்டர் கல்லூரி, திருவள்ளுவர் சாலை, நான்கு சாலை, கந்தசாமி கண்டர் பள்ளி சாலை வழியாகச் சென்று பழைய பேருந்து நிலையம் அருகே முடிவடைந்தது. பேரணியில் 70-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் 100-க்கும் மேற்பட்டோர் தலைக்கவசம் அணிந்து கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com