2011-இல் அ.தி.மு.க.கூட்டணியை தி.மு.க. சூழ்ச்சியால் பிரிய நேரிட்டது: பிரேமலதா விஜயகாந்த்
By DIN | Published On : 01st April 2019 10:23 AM | Last Updated : 01st April 2019 10:23 AM | அ+அ அ- |

2011 - இல் அ.தி.மு.க.வுடன் கூட்டணியிலிருந்து தி.மு.க. சூழ்ச்சியால் பிரிய நேரிட்டது என தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
நாமக்கல் மக்களவைத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பி.காளியப்பனை ஆதரித்து தே.மு.தி.க.பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ராசிபுரத்தில் சனிக்கிழமை இரவு பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் மேலும் பேசியது:
அ.தி.மு.க. கூட்டணி தலைவர்களின் கட்டுப்பாட்டோடு உள்ள கூட்டணி. 2011-இல் அ.தி.மு.க.வுடன் அமைந்த கூட்டணியை தி.மு.க.வின் சூழ்ச்சிகளால் பின்னர் பிரிய நேரிட்டது. தற்போது மீண்டும் வெற்றிக் கூட்டணியாக அமைந்துள்ளது. இதில் தலைவர்கள், தொண்டர்கள் உள்ளனர். ஆனால் எதிரணியில் நிர்வாகிகள் மட்டுமே உள்ளனர். அ.தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் ஆதரவளித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும். பிரதமராக மீண்டும் மோடி பதவியேற்க வேண்டும். அப்போது தான் 40 தொகுதிக்குத் திட்டங்களை கேட்டுப்பெற முடியும். தமிழக முதல்வர் அறிவித்த அத்தனைத் திட்டங்களும் கிடைக்கும். இந்தியாவில் முதல் மாநிலமாக தமிழகம் திகழும். பெண்களுக்கு பாதுகாப்பு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்றார். பிரசார நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பி.தங்கமணி, வி.சரோஜா ஆகியோர் பங்கேற்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...