நாமக்கல்லில் வெயில் 105.8 டிகிரியை எட்டும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

நாமக்கல்லில் வழக்கத்தைக் காட்டிலும் வெயிலின் அளவு 105.8 டிகிரியை எட்டுவதற்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாமக்கல்லில் வழக்கத்தைக் காட்டிலும் வெயிலின் அளவு 105.8 டிகிரியை எட்டுவதற்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வானம் மேகமூட்டமின்றி தெளிவுடன் காணப்படும். காற்று மணிக்கு 6 கிலோ மீட்டர் வேகத்தில் தென்கிழக்கில் இருந்து வீசக்கூடும். வெப்பநிலையானது அதிகபட்சமாக 105.8 டிகிரியும், குறைந்தபட்சம் 75.2 டிகிரியுமாக இருக்கும். 
பண்ணையாளர்களுக்கான வானிலை: கோடைகாலத்தில் வெப்ப அயற்சி,  வெப்ப அதிர்ச்சி ஆகிய இரண்டும் ஒன்று சேர்ந்து கோழிகளை பாதிப்படையச் செய்யும். இதனால் அவற்றுக்கு தீவன எடுப்பு கடுமையாகப் பாதிக்கப்படும். இறக்கவும் நேரிடலாம். 
இறப்பைத் தவிர்த்து, முட்டை எடை,  உற்பத்தியை முடிந்த வரை தக்கவைத்துக் கொள்ளும் யுக்திகளான தீவனத்தில் எண்ணெய் சிறிதளவு(டன்னிற்கு 5 முதல் 8 கிலோ வரை)சேர்த்தும், அமினோ அமிலங்கள் மற்றும் பீடைன் மூட்ரோ குளோரைடு போன்ற பொருட்களைச் சேர்த்து வரவேண்டும், தண்ணீரின் வெப்ப அளவு உயராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com