நாமக்கல்லில் மாவட்ட சிறை விரைவில் அமையும்: சிறைத்துறை டி.ஐ.ஜி. தகவல்

விழுப்புரம், தேனி, தருமபுரி மாவட்டங்களை தொடர்ந்து,  நாமக்கல்லிலும் மாவட்ட சிறைச்சாலை  விரைவில் அமையும் என்று கோவை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. ஆர்.அறிவுடைநம்பி கூறினார்.

விழுப்புரம், தேனி, தருமபுரி மாவட்டங்களை தொடர்ந்து,  நாமக்கல்லிலும் மாவட்ட சிறைச்சாலை  விரைவில் அமையும் என்று கோவை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. ஆர்.அறிவுடைநம்பி கூறினார்.
சேலம் மத்திய சிறையில் மாதாந்திர ஆய்வு மேற்கொண்ட பின், நாமக்கல் கிளைச் சிறையை ஆய்வு செய்வதற்காக, கோவை சரக டி.ஐ.ஜி. ஆர்.அறிவுடைநம்பி சனிக்கிழமை காலை வந்தார். சிறையில் உள்ள விசாரணை கைதிகளிடம் குறைகளை கேட்ட அவர், சிறைப் பணியில் உள்ள காவலர்களிடம், எவ்வித குற்றங்களுக்கும் இடமளிக்காமல் பணியாற்ற வேண்டும். தடை செய்யப்பட்ட பொருள்களை சிறைக்குள் அனுமதிக்கும் நடவடிக்கை இருக்கக்கூடாது என அறிவுறுத்தினார். இந்த ஆய்வுக்கு பின்,  அவர் கூறியது: கோவை சரகத்துக்குள்பட்டு  8 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு சிறைக்கும் சென்று வழக்கமான ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறேன். மக்களவைத் தேர்தலில் தண்டனை கைதிகளோ, விசாரணை கைதிகளோ வாக்களிக்க தகுதியில்லை. ஆட்சியர் உத்தரவின்பேரில் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்கள், அதிலும், பெரிய அளவிலான குற்றங்களில் தொடர்பு இல்லாத ஒரு சிலருக்கு மட்டுமே தேர்தலில் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்படும். கோவை சரகத்தில் தபால் வாக்குச்சீட்டு ஓரிருவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில்,  நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, பரமத்திவேலூர் ஆகிய நான்கு இடங்களில் கிளைச்சிறைகள் உள்ளன. விழுப்புரம், தேனி,  தருமபுரியில் மாவட்ட சிறைகள் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வரவுள்ளன. நாமக்கல்லில், மாவட்ட சிறை அமைப்பதற்கான கருத்துரு ஏற்கெனவே அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆயுதப்படை இருப்பதால், நாமக்கல்லில் மாவட்ட சிறை அமைவது அவசியமாகும். தற்போது, நான்கு கிளைச் சிறைகளிலும் 35-க்கும் குறைவான கைதிகளே உள்ளனர். பெண்களைப் பொருத்தவரை, சேலம் மத்திய சிறைக்கு அருகில் உள்ள பெண்கள் சிறைக்கு அனுப்பி வைக்கிறோம். கைதிகளின் எண்ணிக்கை  குறைந்து வருகிறது. 
கோவை மத்திய சிறையில், சுமார் 2,200 கைதிகள் வைப்பதற்கான வாய்ப்புகள் இருந்தபோதும், 1,800 கைதிகள் மட்டுமே உள்ளனர். சேலம் மத்திய சிறையில், தற்போது 700 கைதிகள் வரை உள்ளனர். கைதிகளின் எண்ணிக்கை குறைவதற்கான முயற்சியை நாங்களும் மேற்கொண்டு வருகிறோம். வாரந்தோறும் எங்களுடைய சிறைக்காவலர்கள், யோகா ஆசிரியர்கள் மூலமாகவும் கைதிகளுக்கான நன்னடத்தை பயிற்சிகளை வழங்கி வருகிறோம். அனைத்து சிறைகளும் சுகாதாரமான முறையில் உள்ளன. கைதிகளின் பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com