சுடச்சுட

  

  நாமக்கல் மக்களவைத் தொகுதியில் 14,13,246 வாக்காளர்கள்: 14,881 பேர் சேர்ப்பு

  By DIN  |   Published on : 16th April 2019 09:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீட்டின்படி, 14 லட்சத்து 13 ஆயிரத்து 246 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் 14,881 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
  நாமக்கல் மக்களவைத் தொகுதியில், நாமக்கல், ராசிபுரம் (தனி), சேந்தமங்கலம் (தனி), பரமத்தி வேலூர், திருச்செங்கோடு, சங்ககிரி உள்ளிட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. கடந்த ஜன. 31-ஆம் தேதி வெளியிட்ட வாக்காளர் பட்டியல் வெளியீட்டின் போது, 6 தொகுதிகளிலும் சேர்த்து 6,88,450 ஆண் வாக்காளர்கள், 7,09,807 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 108 பேர் என மொத்தம் 13,98,365 பேர் இடம் பெற்றிருந்தனர்.
  மக்களவைத் தேர்தலையொட்டி, ஒவ்வோர் வட்டாட்சியர் அலுவலகத்திலும் சம்பந்தப்பட்ட பகுதி வாக்குச் சாவடிகளிலும் பெயர் சேர்க்கைக்கான படிவங்கள் பெறப்பட்டு வந்தன. அவற்றில் தகுதியானோர் தேர்வு செய்யப்பட்டு வாக்காளர் பட்டியலில் இணைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. திங்கள்கிழமை வெளியான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீட்டின்படி, 6,95,247 ஆண் வாக்காளர்களும், 7,17,888 பெண் வாக்காளர்களும், 111 மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 14,13,246 பேர் இடம் பெற்றுள்ளனர்.
  இவற்றில், சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதியில்-3,184, ராசிபுரம்-2,437, சேந்தமங்கலம்-2,288, நாமக்கல்-2,725, பரமத்தி வேலூர்-2,202, திருச்செங்கோடு-2,045 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆண் வாக்காளர்கள் 6,797, பெண் வாக்காளர்கள் 8,081 பேர் புதிதாக இணைந்துள்ளனர். 108-ஆக இருந்த மூன்றாம் பாலினத்தவர் 111-ஆக அதிகரித்துள்ளனர்.
  மாவட்ட வாரியான தொகுதி கணக்கீட்டின்படி, குமாரபாளையம் தொகுதியில் 1,19,532 ஆண் வாக்காளர்களும், 1,23,967 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 23 பேர் என மொத்தம் 2,43,522 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில், 1,693 ஆண்கள், 2,056 பெண்கள் இணைக்கப்பட்டுள்ளனர். மாவட்ட அளவில் வாக்காளர் விவரத்தை கணக்கிட்டால், ஆண் வாக்காளர்கள் 6,80,997, பெண் வாக்காளர்கள் 7,12,315, மூன்றாம் பாலினத்தவர் 121 என மொத்தம் 13,93,433 பேர் உள்ளனர். ஜனவரி மாதம் வெளியான பட்டியலில், மாவட்ட அளவில் மொத்தம் 13,77,987 வாக்காளர் இருந்த நிலையில், திங்கள்கிழமை வெளியான பட்டியலில், 13,93,433 பேர் இடம் பெற்றுள்ளனர். 15,446 பேர்
  அதிகரித்துள்ளனர்.

  இறுதி வாக்காளர் விவரம்
  தொகுதி       ஆண்       பெண்      இதர      மொத்தம்
  சங்ககிரி    1,33,782         1,29,540       13      2,63,335
  ராசிபுரம்    1,12,830        1,16,897         1       2,29,728
  சேந்தமங்கலம்    1,15,604        1,19,528        17       2,35,149
  நாமக்கல்    1,20,806       1,28,080       38      2,48,924
  பரமத்திவேலூர்    1,03,569       1,10,154          6      2,13,729
  திருச்செங்கோடு    1,08,656       1,13,689       36      2,22,381
  மொத்தம்    6,95,247       7,17,888     111    14,13,246
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai