சுடச்சுட

  

  வெண்ணந்தூர் அருகே வெயில் தாக்கத்தால் செத்து மிதக்கும் மீன்கள்

  By DIN  |   Published on : 16th April 2019 09:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் அடுத்துள்ள கல்கட்டானூர் ஏரியில் வெயில் தாக்கத்தால் மீன்கள் செத்து மிதக்கின்றன. 
  கல்கட்டானூர் ஏரியில் கட்லா, ரோகு, பட்டை, கெளுத்தி போன்ற மீன்கள் குத்தகைதாரர்கள் மூலம் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது ஏரியில் நீர் வற்றுவதாலும், வெயிலின் அளவு 100 டிகிரிக்கு மேல் இருப்பதால் தண்ணீர் வெப்பமாவதாலும் தண்ணீரின்றி மீன்கள் இறந்து வருகின்றன.
  இந்த ஏரிக்கு சேலம் சேர்வராயன் மலைப் பகுதியில் உற்பத்தியாகும் தண்ணீரானது மணிமுத்தாறு வழியாக ஆட்டையாம்பட்டி, மதியம்பட்டி, அக்கரைப்பட்டி, ஓ.சவுதாபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார ஏரிகளின் வழியாக வரும். இந்த நிலையில் கடந்த ஆண்டு குறைவான மழை காரணமாக நீரின் அளவு குறைந்து காணப்பட்டது.
  இந்த நிலையில் கல்கட்டானூர் சின்ன ஏரியில் வளர்க்கப்பட்ட மீன்கள் தற்போது இறந்து வருகின்றன.
  சில தினங்களில் தண்ணீர் முற்றிலும் வற்றி அனைத்து மீன்களும் இறந்துவிடும் நிலை
  உள்ளது. 
  ஏரியில் செத்து மிதக்கும் மீன்களால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், மீன்கள் இறப்பது குத்தகைதாரர்களுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai