பி.ஜி.பி. வேளாண் கல்லூரியில் சிறப்பு ஆராய்ச்சி மையம் தொடங்க முடிவு

நாமக்கல் பி.ஜி.பி. வேளாண் கல்லூரியில் சிறப்பு ஆராய்ச்சி மையம் தொடங்க இருப்பதாக அக்கல்லூரி தலைவர் பழனி ஜி.பெரியசாமி தெரிவித்தார்.

நாமக்கல் பி.ஜி.பி. வேளாண் கல்லூரியில் சிறப்பு ஆராய்ச்சி மையம் தொடங்க இருப்பதாக அக்கல்லூரி தலைவர் பழனி ஜி.பெரியசாமி தெரிவித்தார்.
நாமக்கல் வேட்டாம்பாடியில் உள்ள பி.ஜி.பி. வேளாண் கல்லூரி ஆண்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. அக்கல்லூரி தலைவர் பழனி ஜி.பெரியசாமி தலைமை வகித்தார். பொறியியல், கலை அறிவியல் கல்லூரி முதல்வர் கணபதி, வேளாண் கல்லூரி முதல்வர் கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து, பழனி ஜி.பெரியசாமி செய்தியாளர்களிடம் கூறியது: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 28 கல்லூரிகளில், நாமக்கல் பி.ஜி.பி. வேளாண் கல்லூரியும் ஒன்று. 2013-இல் தொடங்கப்பட்ட இக்கல்லூரியானது, நடப்பாண்டுக்கான சேர்க்கையை விரைவில் தொடங்க உள்ளது.
மொத்தம் 120 மாணவர்களில், 40 மாணவர்கள் நேரடியாகவும், 80 மாணவர்கள் அரசு ஒதுக்கீட்டின் அடிப்படையிலும் சேர்க்கை பெறுகின்றனர். தமிழக அளவில் வேளாண் கல்லூரிகளில் இரண்டாமிடத்தைப் பிடித்துள்ள இக்கல்லூரியில் பல்வேறு மாநிலத்தவரும் படிக்கின்றனர். ஏற்கெனவே, இங்கு பயின்ற மாணவர்கள் வெளிநாடுகளில் பணியில் உள்ளனர்.
நாமக்கல் பகுதியில் வேளாண் துறை வளம் பெற செய்ய வேண்டும் என்பதற்காகவே இக் கல்லூரி தொடங்கப்பட்டது. இளநிலை, முதுநிலை படிப்புடன், இங்கு ஆராய்ச்சி சார்ந்த படிப்பும் உள்ளது. வேளாண் துறைக்கென சிறப்பு ஆராய்ச்சி மையத்தை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com