சுடச்சுட

  

  திருச்செங்கோடு கூட்டப்பள்ளி காலனி சக்தி மாரியம்மன் திருக்கல்யாணம்

  By DIN  |   Published on : 17th April 2019 02:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  அறிஞர் அண்ணா நகர் கூட்டப்பள்ளி காலனியில் அமைந்துள்ள அருள்மிகு சக்தி மாரியம்மன் ஆலயத்தில் 30-ஆம் ஆண்டு திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
  திருவிழாவில் அருள்மிகு சர்வசக்தி மாரியம்மனுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட சீர்வரிசை தட்டுகளை ஊர்வலமாக மேளதாளம் முழங்க கோயிலுக்கு எடுத்து வந்தனர். திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சியில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. புதன்கிழமை காவிரி தீர்த்தம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து பொங்கல் வைத்து வழிபாடு செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai