சுடச்சுட

  


  மக்களவைத் தேர்தல் வியாழக்கிழமை நடைபெறுவதையொட்டி, ஜேசிஐ சஞ்சீவனம் சங்கத்தின் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி புதிய பேருந்து நிலைய வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
  நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார்.  முன்னாள் தலைவர்கள் முத்து, மகேந்திரன் முன்னிலை வகித்தனர். 
  சிறப்பு விருந்தினராக ஜேசிஐ இந்தியா மண்டல இயக்குநர் கவிக்குமார் கலந்துகொண்டு விழிப்புணர்வு பறையிசை நிகழ்ச்சியினை தொடக்கி வைத்தார்.
  நிகழ்ச்சியில் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், நேர்மையாக வாக்களிப்பது குறித்த துண்டுப் பிரசுரங்களை பறையிசை ஊர்வலத்துடன் பொதுமக்களுக்கு வழங்கினர். 
  நிகழ்ச்சியில் சங்கத்தின் உதவித் தலைவர்கள், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai