சுடச்சுட

  

  வாக்குச் சாவடியில் பயன்படுத்தப்படும் 20 பொருள்கள்: ஆட்சியர் ஆய்வு

  By DIN  |   Published on : 17th April 2019 02:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  நாமக்கல் மக்களவைத் தேர்தலையொட்டி, வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பப்படும் 20 பொருள்கள் குறித்து ஆட்சியர் மு.ஆசியா மரியம் நேரில் ஆய்வு செய்தார். 
  நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் வியாழக்கிழமை நடைபெறுகிறது. அதையொட்டி, வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பப்படவுள்ள பொருள்களை ஒருங்கிணைக்கும் பணிகள் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற்று வருகின்றன. ஆட்சியர் மு.ஆசியா மரியம் இப்பணிகளை பார்வையிட்டார். வாக்குச் சாவடியில், பென்சில், பால் பாயிண்ட் பேனாக்கள், வெள்ளை தாள்கள், ஊசிகள், அரக்கு சீல் குச்சி, பசை பாட்டில், பிளேடு, மெழுகுவர்த்தி, நூல்கண்டு, மெட்டல் ரூல், பிரவுன் சீட், கார்பன் பேப்பர், பிளாஸ்டிக் கப், ரப்பர் பேண்டு, செல்லோ டேப், ஸ்டேம்ப் பேடு, இங்க் பாட்டில், டிராயிங் பின்கள், தீப்பெட்டி உள்ளிட்ட 20 வகை பொருள்கள் பயன்படுத்தபடவுள்ளன.
  நாமக்கல் வட்டாட்சியர் அலுவலகம், சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இதற்கான பணிகள் நடைபெற்றன. சேந்தமங்கலம் வட்டம், முத்துகாப்பட்டி, அரசினர் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியினை ஆட்சியர் ஆய்வு செய்தார். மேலும், அங்கு நிறுவப்படும் கண்காணிப்பு கேமரா குறித்தும் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது நாமக்கல் வட்டாட்சியர் சுப்பிரமணியம், சேந்தமங்கலம் வட்டாட்சியர் செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai