சுடச்சுட

  

  வெங்கரையில் அதிமுக வேட்பாளர் இறுதிக்கட்ட வாக்குச் சேகரிப்பு

  By DIN  |   Published on : 17th April 2019 02:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  பரமத்தி வேலூரை அடுத்துள்ள வெங்கரையில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் காளியப்பன் பேரணியாக சென்று இறுதிக்கட்ட வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
  பரமத்தி வேலூர் வட்டம், வெங்கரையில் நாமக்கல் மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் காளியப்பனை ஆதரித்து நாமக்கல் மாவட்ட அதிமுக இலக்கிய அணி செயலர் விஜயகுமார் தலைமையில் ஆண்கள் மற்றும் பெண்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்று வெங்கரை பேரூராட்சி பகுதியில் பொதுமக்களிடையே வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.
  வெங்கரை அக்ரஹாரம் பகுதியில் இருந்து தொடங்கிய ஊர்வலம், வெங்கரையின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று வெங்கரையம்மன் கோயில் முன் நிறைவு பெற்றது. இதில் வெங்கரை பேரூர் கழகச் செயலர் ரவீந்திரன், வெங்கரை பேரூராட்சி முன்னாள் தலைவர் நித்தியகுமாரி மற்றும் கூட்டணி கட்சியைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai