அதிக வெப்பம் காரணமாக கோழிகளில் தீவன எடுப்பு குறையும்

அதிக வெப்பம் காரணமாக கோழிகளில் தீவன எடுப்பு குறையும் என வானிலை ஆய்வு மையம்


அதிக வெப்பம் காரணமாக கோழிகளில் தீவன எடுப்பு குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வரும் மூன்று நாள்களுக்கு வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். காற்று 8 கிலோ மீட்டர் வேகத்தில் தெற்கில் இருந்து வீசக்கூடும். வெப்பநிலை அதிகபட்சமாக 104.2 டிகிரியாக இருக்கும். 
பண்ணையாளர்களுக்கான ஆலோசனை: வானம் சற்று மேகமூட்டத்துடனும், காற்றின் வேகம் அதிகரித்தும், 18, 19 தேதிகளில் மாவட்டத்தின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கான வாய்ப்பும் காணப்படும். இதனால் பகல் மற்றும் இரவு வெப்ப அளவுகள் குறைவதற்கான வாய்ப்பில்லை.
கோழிகளில் மிக அதிக வெப்பம் காரணமாக தீவன எடுப்பு குறைந்து காணப்படும், முட்டை எடை குறையும். இதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு, தீவனத்தில் அதிக புரதம் மற்றும் முட்டை உடையாமல் தவிர்க்க சோடா உப்பு (2 கிலோ/ டன்) மற்றும் அமினோ அமிலங்கள் சேர்க்க வேண்டும். முட்டை எடையை தக்க வைத்துக்கொள்ள தீவனத்தில் பீடைன், மூட்ரோகுளோரைடு என்ற பொருளை சேர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com