பெண்கள் மட்டுமே பணியாற்றும் 6 வாக்குச் சாவடிகள்: 24 மாதிரி வாக்குச் சாவடிகள் தயார்

நாமக்கல் மாவட்டத்தில் பெண்கள் மட்டுமே பணியாற்றும் 6 வாக்குச் சாவடிகள் மற்றும் 24 மாதிரி வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் மு.ஆசியா மரியம் தெரிவித்துள்ளார்.


நாமக்கல் மாவட்டத்தில் பெண்கள் மட்டுமே பணியாற்றும் 6 வாக்குச் சாவடிகள் மற்றும் 24 மாதிரி வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் மு.ஆசியா மரியம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்திய தேர்தல் ஆணையமானது நாமக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் ஏதேனும் ஒரு வாக்குச் சாவடியை தேர்ந்தெடுத்து, அங்கு வாக்குச் சாவடி அலுவலர்கள் அனைவரையும் பெண்களாக நியமிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. மேலும், பாதுகாப்புப் பணிக்கு பெண் காவலர்களை நியமிக்க வேண்டும் என்றும், இந்த அனைத்து மகளிர் வாக்குச் சாவடிக்கு சக்தி வாக்குச் சாவடி என்றும், இளஞ்சிவப்பு வாக்குச் சாவடி என்றும் பெயரிடுமாறும் வலியுறுத்தியது.
அதனடிப்படையில், நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் (தனி) தொகுதியில், ராசிபுரம்  தேசிய பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள  வாக்குச் சாவடி, சேந்தமங்கலம் (எஸ்.டி.) தொகுதியில் ரெட்டிப்பட்டி பாரதி அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளி, நாமக்கல் தொகுதியில், நாமக்கல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி (தெற்கு), பரமத்தி வேலூர் தொகுதியில் பரமத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, திருச்செங்கோடு தொகுதியில் திருச்செங்கோடு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, குமாரபாளையம் தொகுதியில் புத்தர் தெரு எம்.எம்.பள்ளி என 6 வாக்குச் சாவடிகள் அனைத்து மகளிர் வாக்குச் சாவடிகளாக  அமைக்கப்பட்டுள்ளன.
இந்திய தேர்தல் ஆணைப்படி ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் நான்கு மாதிரி வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது. அதன்படி, ராசிபுரம் தொகுதியில், ராசிபுரம், அறிஞர் அண்ணாசாலை, அரசினர் மேல்நிலைப் பள்ளி (வாக்குச் சாவடி  எண்: 141),  ஆண்டகளுர் கேட், திருவள்ளுவர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (வாக்குச் சாவடி  எண்: 171), மங்களபுரம், அரசினர் மேல்நிலைப் பள்ளி (வாக்குச் சாவடி  எண்: 207), உடையார்பாளையம் அரசினர் உயர்நிலைப் பள்ளி (வாக்குச் சாவடி  எண்: 234) உள்ளிட்ட 4 வாக்கு சாவடிகளும், சேந்தமங்கலம் (எஸ்.டி.) சட்டப்பேரவைத் தொகுதியில் காளப்பநாய்க்கன்பட்டி புதூர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி (வாக்குச் சாவடி எண்: 106), காளப்பநாய்க்கன்பள்ளி, அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி (வாக்குச் சாவடி எண்: 109), கோனானூர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி (வாக்குச் சாவடி எண்: 142), எருமப்பட்டி, கைக்காட்டி, ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி (வாக்குச் சாவடி எண்: 217) உள்ளிட்ட 4 வாக்குச் சாவடிகளும் மாதிரி வாக்குச் சாவடிகளாக அமைக்கப்பட்டுள்ளன.
நாமக்கல் தொகுதியில் புதுச்சத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளி (வாக்குச் சாவடி எண்: 25), செல்லப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி (வாக்குச் சாவடி எண்: 73), நாமக்கல் (வடக்கு) அரசு மேல்நிலைப் பள்ளி (வாக்குச் சாவடி எண்: 123), மோகனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி (வாக்குச் சாவடி எண்: 286) உள்ளிட்ட 4 வாக்குச் சாவடிகளும், பரமத்தி வேலூர் தொகுதியில் கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி (வாக்குச் சாவடி எண்: 37), பொத்தனூர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி (வாக்குச் சாவடி எண்: 81), கந்தம்பாளையம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி (வாக்குச் சாவடி எண்: 114),  கே.புதுப்பாளையம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (வாக்குச் சாவடி எண்: 175) உள்ளிட்ட 4 வாக்குச் சாவடிகளும் உருவாக்கப்பட்டுள்ளன.
திருச்செங்கோடு தொகுதியில் வையப்பமலை அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி (வாக்குச் சாவடி எண்: 50), கூட்டப்பள்ளி எம்.எம். பள்ளி (வாக்குச் சாவடி எண்: 118), திருச்செங்கோடு ஒளவை கல்வி நிலையம் (வாக்குச் சாவடி எண்: 196), புதுப்புளியம்பட்டி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி (வாக்குச் சாவடி எண்: 230) உள்ளிட்ட 4 வாக்குச் சாவடிகளும், குமாரபாளையம் தொகுதியில் சுந்தரம் நகர், எம்.எம்.பள்ளி (வாக்குச் சாவடி எண்: 51), செங்கோடம்பாளையம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி (வாக்குச் சாவடி எண்: 159), வெடியரசம்பாளையம், அரசினர் மேல்நிலைப் பள்ளி (வாக்குச் சாவடி எண்: 177), ஆலாம்பாளையம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி (வாக்குச் சாவடி எண்: 226) உள்ளிட்ட 4 வாக்குச் சாவடிகளும் மாதிரி வாக்குச் சாவடிகளாக அமைக்கப்பட்டுள்ளன.
மாதிரி வாக்குச் சாவடிகள் மற்றும் அனைத்து மகளிர் வாக்குச் சாவடிகளில் மின் விளக்கு வசதி, கழிப்பிட வசதி, நிழற்கூட வசதி, மேஜைகள் மற்றும் நாற்காலி வசதி, முறையான வழிகாட்டி பதாகைகள் வசதி, வர்ணம் பூசி அழகுபடுத்துதல், வாக்காளர்கள் செய்யக் கூடியவை மற்றும் செய்யக் கூடாதவை குறித்த அறிவிப்பு பலகைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com