கைப்பந்துப் போட்டி: தமிழக அணிக்கு ஆர்.என்.ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவி தேர்வு

பரமத்தி வேலூர் அருகே உள்ள பாண்டமங்கலம் ஆர்.என்.ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவி 14 வயதுக்குள்பட்டோர்  பிரிவில் தேசிய அளவிலான கைப்பந்துப் போட்டிக்கு தமிழக அணிக்குத் தேர்வு பெற்றுள்ளார்.


பரமத்தி வேலூர் அருகே உள்ள பாண்டமங்கலம் ஆர்.என்.ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவி 14 வயதுக்குள்பட்டோர்  பிரிவில் தேசிய அளவிலான கைப்பந்துப் போட்டிக்கு தமிழக அணிக்குத் தேர்வு பெற்றுள்ளார்.
மஹாராஷ்டிரம் மாநிலத்தில் நடைபெற்று வரும் 14 வயதுக்குள்பட்ட மாணவ, மாணவியர்களுக்கான கைப்பந்துப் போட்டியில் பங்கேற்க தமிழக அணிக்கான தேர்வு திருச்சியில் நடைபெற்றது. இத் தேர்வில் மாணவியர் பிரிவில் சுமார் 230 பேர் பங்கு பெற்றனர். இதில் 12 மாணவியரைத் தமிழக அணிக்குத் தேர்வு செய்து பயிற்சி அளித்தனர். அவர்கள் தற்போது மஹாராஷ்டிர
மாநிலத்தில் விளையாடி வருகின்றனர். தேசிய அளவிலான கைப்பந்துப் போட்டியில் தமிழக அணியினர் கால் இறுதிப் போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளனர். இந்த 12 மாணவியரில் ஆர்.என்.ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவி எஸ்.வைஷாலி தமிழக அணியில் விளையாடி மாவட்டத்துக்கும், பள்ளிக்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்து வருகிறார். தமிழக அணியில் இடம் பிடித்த மாணவி வைஷாலியை பள்ளியின் தலைவர் சண்முகம், தாளாளர் சக்திவேல், செயலாளர் ராஜா,  இயக்குநர்கள் அருள், சேகர், பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் விளையாட்டு ஆசிரியர் ஆகியோர் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com