சோழசிராமணியில் 22-ஆம் ஆண்டாக முயல் வேட்டைக்குத் தடை

பரமத்தி வேலூர் வட்டம், ஜேடர்பாளையம் அருகே உள்ள சோழசிராமணி கிராமத்தைச் சேர்ந்த இரு பிரிவினர் ஒவ்வோர் ஆண்டும் ஆடி 18 பண்டிகையன்று முயல் வேட்டைக்குச் செல்வர்.
சோழசிராமணியில் 22-ஆம் ஆண்டாக முயல் வேட்டைக்குத் தடை

பரமத்தி வேலூர் வட்டம், ஜேடர்பாளையம் அருகே உள்ள சோழசிராமணி கிராமத்தைச் சேர்ந்த இரு பிரிவினர் ஒவ்வோர் ஆண்டும் ஆடி 18 பண்டிகையன்று முயல் வேட்டைக்குச் செல்வர். கடந்த 22 ஆண்டுகளுக்கு முன் முயல் வேட்டையின் போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதனால் உயிரிழப்பும், சிலர் கைதும் செய்யப்பட்டனர். இதனால் வருவாய்த் துறை மற்றும் போலீசார் முயல் வேட்டைக்குத் தடை விதித்திருந்தனர். இத் தடை தொடர்ந்து நீடித்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் இத் தடையை நீக்கக்கோரி, சோழசிராமணி கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த ஆண்டு ஆடி 18 பண்டிகைக்கு முயல் வேட்டைக்கான தடையை நீக்க வேண்டும் என சோழசிராமணி பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
 இது தொடர்பான அமைதி பேச்சுவார்த்தை பரமத்தி வட்டாட்சியர் ருக்குமணி தலைமையில், ஜேடர்பாளையம் காவல் துறை ஆய்வாளர் (பொறுப்பு) தங்கவேல் முன்னிலையில் நடைபெற்றது.
 இதில் இரு தரப்பினரின் நலனைக் கருத்தில் கொண்டு முயல் வேட்டைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், காவிரி ஆற்றுக்கு ஊர்வலமாக சென்று வரும் நிகழ்ச்சியை மாலை 3 மணியில் இருந்து 6 மணிக்குள் முடித்துக்கொள்ள வேண்டும். இரு தரப்பினரும் ஆடி 18 பண்டிகையன்று சட்டம் ஒழுங்கு மற்றும் பொது அமைதிக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் நடத்து கொள்ள வேண்டும் என அமைதி பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது. இந்த இரு தரப்புகளைச் சேர்ந்தவர்களில் ஒரு தரப்பினர் கோரிக்கை வைத்தால் மட்டும் இனி வரும் காலங்களில் அமைதிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் எனவும், அதை பரிசீலனைக்கு உட்பட்டதாக இருந்தால் மட்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் வருவாய்த் துறையினர், காவல் துறையினர் மற்றும் இரு தரப்பைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com