ராசிபுரம் பகுதியில் திருட்டு:  ஒருவர் கைது

ராசிபுரம் பகுதியில் வீடுகளின் பூட்டை உடைத்து நகைகள் திருடிய  வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

ராசிபுரம் பகுதியில் வீடுகளின் பூட்டை உடைத்து நகைகள் திருடிய  வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
நாமக்கல் மாவட்டம்,  ராசிபுரம் ஆண்டகலூர்கேட்  அருகில் கடந்த ஜனவரி  18-ஆம் தேதி இரவு தனியார் நகைக் கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர் ஒருவர் திருட முயற்சித்தார். அதேபோல, ஜூன் 2-ஆம் தேதி இரவு ராசிபுரம் டவுன் அரசமரம் வீதியில் பூட்டியிருந்த பாப்பாத்தி  என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 3 பவுன் நகை திருடப்பட்டது. மேலும்,  ,ஜூலை 8-ஆம் தேதி  இரவு ராசிபுரம் பீச்சாம்பாளையம் பகுதியில் பூட்டியிருந்த லட்சுமி என்பவரது வீட்டுக்குள் நுழைந்து 3 பவுன் தாலிக்கொடி திருடப்பட்டது. இந்தத் திருட்டு சம்பவங்கள் தொடர்பாக  ராசிபுரம் காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்   உத்தரவின் பேரில்  ராசிபுரம் காவல் ஆய்வாளர் செல்லமுத்து தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு,  குற்றவாளிகளை தேடிவந்தனர். இந்த நிலையில், வியாழக்கிழமை காலை  ராசிபுரம்  உதவி ஆய்வாளர் மாணிக்கம் மற்றும் போலீஸார்,  ராசிபுரம்- சேந்தமங்கலம் பிரிவு பேருந்து நிறுத்தம் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் சட்டையின் பின்புறம் இரும்புக் கம்பி ஒன்றை மறைத்து வைத்தபடி நடந்து வந்து கொண்டிருந்தவரைப் பிடித்து  விசாரித்தனர். இதில் அவர் திருச்சி கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் (32) என்பதும்,  ராசிபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு திருட்டு செயல்களில் ஈடுபட்டு வந்ததும்  தெரியவந்தது.  திருடப்பட்ட நகைகளில்  6 பவுன் கைப்பற்றப்பட்டது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் குற்றவாளியைக் கைது செய்த தனிப்படையினரை காவல் கண்காணிப்பாளர் அர. அருளரசு பாராட்டினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com