முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்
தீரன் சின்னமலை நினைவு தினம்
By DIN | Published On : 04th August 2019 05:08 AM | Last Updated : 04th August 2019 05:08 AM | அ+அ அ- |

தீரன் சின்னமலை நினைவு தினத்தையொட்டி, நாமக்கல்லில் அவரது உருவப் படத்துக்கு பல்வேறு அமைப்பினர் சனிக்கிழமை மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடியவர்களுள் ஒருவரான தீரன் சின்னமலையின் நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. நாமக்கல் மணிக்கூண்டு அருகில் கொங்கு இளைஞர் பேரவை சார்பில் தீரன் சின்னமலை உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதன்பின், 50 - க்கும் மேற்பட்டோர் மோகனூர் வழியாக காங்கயத்திற்கு வாகனங்களில் ஊர்வலமாகச் சென்றனர்.
இதேபோல், நாமக்கல் - பரமத்தி சாலையில் உள்ள கொங்கு திருமண மண்டபம் முன்பாக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்டச் செயலாளர் மாதேஸ்வரன் தலைமையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட வாகனங்களில் ஊர்வலமாக வந்த கட்சியினர், சந்தைப்பேட்டை புதூர் பகுதியில் வைக்கப்பட்டிருந்த தீரன் சின்னமலை உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திவிட்டு, கோட்டை சாலை வழியாக சங்ககிரி நோக்கிச் சென்றனர். மேலும், நாம் தமிழர் கட்சியினர், கொங்கு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் சின்னமலை உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தினர்.