முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்
பொன்வரதராஜ பெருமாள் கோயிலுக்கு குடிநீர் சுத்தகரிப்பு கருவி
By DIN | Published On : 04th August 2019 05:08 AM | Last Updated : 04th August 2019 05:08 AM | அ+அ அ- |

ராசிபுரம் பொன்வரதராஜ பெருமாள் கோயிலுக்கு ராசிபுரம் ராயல் ரோட்டரி சங்க சார்பில் குடிநீர் சுத்திகரிப்பு கருவி வழங்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக வழங்கப்பட்ட இந்த கருவியை ராயல் ரோட்டரி சங்கத் தலைவர் டாக்டர் எஸ்.இளஞ்செழியன், செயலர் பூபாலன், பொருளாளர் ராமலிங்கம் உள்ளிட்டோர் வழங்கினர். இதில் சங்க நிர்வாகிகள் கார்த்தி, ரமேஷ், ஆர்.எஸ்.அன்பழகன், ரவிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.