முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்
மாற்றுத்திறன் மாணவர்களுக்கான மருத்துவ முகாம்
By DIN | Published On : 04th August 2019 05:08 AM | Last Updated : 04th August 2019 05:08 AM | அ+அ அ- |

வெண்ணந்தூர் வட்டார வள மைய ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் சார்பில் மாற்றுத் திறன் கொண்ட மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் 18 வயதுக்குள்பட்ட மாற்றுத்திறன் கொண்ட மாணவ, மாணவியர் 221 பேர் பங்கேற்றனர். இவர்களுக்கு கண் மருத்துவர்கள் எஸ்.அனிதா, எஸ்.குமரன், எஸ்.பிரபாகரன், மனநல மருத்துவர் எம்.மாணிக்கம், பி.பிரதாப், என்.மணிவண்ணன் ஆகியோர் பங்கேற்று பரிசோதனை செய்து சிகிச்சையளித்தனர். மேலும், 5 மாணவர்களுக்கு உபகரணங்கள், 14 பேருக்கு அடையாள அட்டை, 52 பேருக்கு கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன. கல்வித் திட்ட உதவி மேற்பார்வையாளர் பெரியண்ணன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நந்தினி தேவி, வெண்ணந்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ப.முத்துசாமி, வட்டாரக் கல்வி அலுவலர் ஏ.பழனியம்மாள், வளமைய மேற்பார்வையாளர் சி.மலர்க்கொடி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக முகாம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வுப் பேரணி முக்கிய வீதிகளில் நடைபெற்றது.