சுடச்சுட

  

  தமிழக அரசின் சாதனைகளை விளக்கி, மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட மரப்பரை ஊராட்சி மலைக்காவல் அம்மன் கோயில் தெரு பகுதியில் புகைப்படக் கண்காட்சி செவ்வாய்க்கிழமை அமைக்கப்பட்டிருந்தது.
   இதில், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள், புதிய திட்டப்பணிகளை துவக்கி வைத்த நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி, சமூக நலன்- சத்துணவுத்திட்டத்துறை அமைச்சர் மருத்துவர் வெ.சரோஜா, ஆட்சியர் மு.ஆசியா மரியம் ஆகியோர் நாமக்கல் மாவட்டத்தில் பயனாளிகளுக்கு வழங்கிய பல்வேறு நலத்திட்ட உதவிகள் குறித்த புகைப்படங்கள், புதிய திட்டப்பணிகளை துவக்கி வைத்த நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் உள்ளிட்டவை கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன. இதனை ஏராளமான மக்கள் பார்வையிட்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai