சுடச்சுட

  

  அறிவுத் திறனை மேம்படுத்த வேண்டும்: மாணவிகளுக்கு துணைவேந்தர் அறிவுரை

  By DIN  |   Published on : 14th August 2019 09:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அறிவுத்திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ராஜேந்திரன் தெரிவித்தார்.
   திருச்செங்கோடு விவேகானந்தா கலை, அறிவியல் மகளிர் கல்லூரியின் (தன்னாட்சி) 21-வது பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது. இதில், இளநிலை, முதுநிலை, ஆய்வியல் நிறைஞர் (20 தங்கப்பதக்கங்கள், 180 முதல் தர வரிசை) என 1134 மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கி, ராஜேந்திரன் பேசியது:-
   கல்லூரி நிர்வாகத்தின் திறமையான மேலாண்மை, ஆசிரியர்களின் சிறப்பான கற்பித்தல் முறை, மாணவிகளின் விடா முயற்சி ஆகியவற்றால், பட்டம் கிடைத்துள்ளது.
   இன்றைய நவீன உலகில் மாணவிகள் அறிவுத் திறனை தினம்தோறும் புதுப்பித்துகொள்ள வேண்டும்.
   சமூக சேவகி அன்னை தெரசா, குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் ஆகியோரை முன்மாதிரியாக எடுத்துகொண்டு புதுமையான சிந்தனைகளையும் செயல்பாட்டையும் சமுதாயத்துக்கு வழங்கவேண்டும். எதிர்காலத்தில் சுய தொழில் செய்ய முன் வரவேண்டும் என்றார்.
   விழாவுக்கு விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மு.கருணாநிதி தலைமை வகித்தார். நிர்வாக இயக்குநர் கிருஷ்ணவேணி கருணாநிதி, துணை நிர்வாக இயக்குனர் எஸ். அர்த்தநாரீஸ்வரன், துணைச் செயலர் க.ஸ்ரீராகநிதி அர்த்தநாரீஸ்வரன், துணை தாளாளர் க.கிருபாநிதி, செயல் இயக்குனர் கே.பி. நிவேதனா கிருபாநிதி, கல்வி ஆலோசகர் டி.விஸ்வநாதன், முதன்மை நிர்வாகி.மீ.சொக்கலிங்கம், சேர்க்கை இயக்குநர் செ.வரதராசன், கல்லூரி முதல்வர் சுரேஷ்குமார், தேர்வாணையர் சு.லீலாவதி, புல முதன்மையர் வீ.குமாரவேல், துணைத் தேர்வாணையர் கே.கமர்ஜகான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai