சுடச்சுட

  

  தமிழ்நாடு கேலிவதை தடுப்புச் சட்ட விழிப்புணர்வு குறித்த பயிற்சி முகாம் நாமக்கல் செல்வம் கல்லூரி அரங்கில் அண்மையில் நடைபெற்றது.
   முகாமுக்கு கல்லூரித் தாளாளர் மருத்துவர் பொ.செல்வராஜ் தலைமை வகித்தார். செயலர் கவீத்ரா நந்தினிபாபு, நிர்வாக இயக்குநர் கி.சி.அருள்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் என்.ராஜவேல் வரவேற்றார்.
   இதில், கேலிவதையால் ஏற்படும் தீமைகள், அது தொடர்பான தண்டனைகள் ஆகியன குறித்து மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலரும், நாமக்கல் சார்பு நீதிபதியுமான சுஜாதா, வழக்குரைஞர்கள் அமுதவள்ளி, ரேகா, அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் லட்சுமி ஆகியோர் பேசினர். இதுதவிர, தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும் அறிவுரை வழங்கினர்.
   ஆங்கிலத் துறை தலைவர் ஈஸ்வரன், உதவிப் பேராசிரியர் ஆர். ஹரிஹரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai