சுடச்சுட

  

  சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் அரசு மதுபானக் கடைகள், மதுபானக் கூடங்கள் வியாழக்கிழமை(ஆகஸ்ட் 15) மூடப்பட வேண்டும் என ஆட்சியர் மு.ஆசியா மரியம் தெரிவித்துள்ளார்.
   இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பது; -
   சுதந்திர தினம் வியாழக்கிழமையன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், அரசு மதுபானக் கடைகள், மதுக் கூடங்கள், மதுபான உரிமம் பெற்ற வளாகங்கள் மூடப்பட வேண்டும்.
   இந்த நாளில் மதுபானக் கடைகள், மதுக்கூடங்கள் திறந்திருந்தாலோ, மறைமுகமாக விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai