சுடச்சுட

  

  ராசிபுரம் இன்னர்வீல் சங்கம் , ராசிபுரம் ரோட்டரி சங்கம், பிள்ளாநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியன இணைந்து தாய்ப்பால் வார விழாவை செவ்வாய்க்கிழமை நடத்தின.
   விழாவுக்கு இன்னர் வீல் சங்கத் தலைவர் ராஜேஸ்வரி சிவக்குமார் தலைமை வகித்தார். இன்னர் வீல் சங்க முன்னாள் மாவட்டத் தலைவர் தெய்வானை ராமசாமி அனைவரையும் வரவேற்றார்.
   இதில், தாய்ப்பால் அவசியம், முக்கியத்துவம் குறித்து ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவர் ஏ.திருமூர்த்தி பிள்ளாநல்லூர் ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் செல்வி, மருத்துவர்கள் திவ்யா, பாலாமணி, இன்னர் வீல் சங்கத் துணைத் தலைவி பத்மாவதி , பொருளாளர் ரமணி, ராசிபுரம் ரோட்டரி சங்கச் செயலர் கே.எஸ்.கருணாகர பன்னீர்செல்வம் ஆகியோர் பேசினர்.
   விழாவில் இன்னர் வீல் சங்கச் செயலர் புவனேஸ்வரி, நிர்வாகிகள் மாதேஸ்வரி, பானு யமுனா , எம்.தர்மலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai