சுடச்சுட

    

    ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் நாமகிரிப்பேட்டை ஏலமையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில், ரூ.22 லட்சத்துக்கு மஞ்சள் ஏல வர்த்தகம் நடைபெற்றது.
     ஏலத்துக்கு விரலி ரகம் 400 மூட்டை, உருண்டை ரகம் 130 மூட்டை, பனங்காளி ரகம் 30 மூட்டை என மொத்தம் 560 மூட்டைகள் வந்தன. இந்த ஏலத்தில் விரலி ரகம் குவிண்டால் ரூ.5,632 முதல் ரூ.8, 022 வரையும், உருண்டை குவிண்டால் ரூ.5 , 632 முதல் ரூ.7,140 வரையும், பனங்காளி ரூ.8,402 முதல் ரூ.13,212 வரையும் விலை போனது. இதில் மொத்தம் ரூ.22 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்றது.
     இதேபோல், அக்கரைப்பட்டி ஏல மையத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் 990 மூட்டைகள் விற்பனைக்கு வந்திருந்தது. சுரபி ரகம் ரூ.5, 666 முதல் ரூ.6,486 வரை குவிண்டால் ஒன்றுக்கு விற்பனையானது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai